[Image source : ANI]
பஞ்சாப் அமிர்தரஸ் பகுதியில் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் நகரில் உள்ள பொற்கோவில் அருகே அடுத்தடுத்த நாட்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் (6ஆம் தேதி) சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி காயமடைந்தார்.
தற்போது இன்று அதே போல, அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ள பிரதான தெருவில் காலை 6.30 மணி அலையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்து உள்ளனர். இரண்டு குண்டுவெடிப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி காரணங்களை ஆராய வேண்டும் என பகுதி குடியிருப்புவாசிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…