பக்ரீத் பண்டிகை…!செல்ஃபி எடுக்கத் தடை…!அதிரடி உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பக்ரீத் பண்டிகையையொட்டி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளார்.
வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம். ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பக்ரீத் பண்டிகையையொட்டி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளார்.
அதில் பொது இடங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகளை பலியிடக்கூடாது. பலியிடும் முன்பு ஆடுகள், மாடுகளுடன் செல்ஃபி எடுக்கக்கூடாது. இதற்கு அனுமதி அளிக்க முடியாது. அதுபோலவே விலங்குகளை பலியிடும் கோரக் காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிடக்கூடாது என்று அதிரடியாக விதிமுறைகளை பிறப்பித்துள்ளார்.
DINASUVADU