பக்தர்களின் போராட்டத்தால் முடிவை மாற்றுகிறதா கேரள அரசு..!!

Default Image

கேரளாவில்  ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகிறது.

கேரள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்ததன் பெயரில் கேரளா அரசு பெண்களுக்கு ஐயப்பன் கோவிலில் உரிய வசதிகள் , பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றது.

இது கேரளாவில் பெரிய போராட்டத்தை உண்டாக்கியது.இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து போராடினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு என அரசு தீர்ப்பை அமுல்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இரண்டு பெண் பத்திரிக்கையாளர்களை காவல்துறை பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் சந்நிதியை நோக்கி அழைத்து சென்றது ஆனால் அங்கே பக்தர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து காவல்துறையும் , அரசும் இரண்டு பெண்களையும் அழைத்து செல்லும் முடிவை கைவிட்டது.

இதை தொடர்ந்து ஐயப்பன் கோவில் சன்னிதியில் இன்று 18ஆம் படிக்கு கீழே அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஐயப்பன் கோவில் வரலாற்றில் இப்படி ஐயப்பன் சன்னிதி 18ஆம் படியில் போராட்டம் நடப்பது இதுவே முதல்முறை இந்நிலையில் சபரிமலை நிலவரம் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பகராவிடம் கேட்டறிந்தார் ஆளுநர் சதாசிவம் பெண்களை அனுமதிக்க மறுத்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் டிஜிபியிடம் நிலவரத்தை கேட்டறிந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கேரள ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அரசு எந்த மாதிரியான முடிவு எடுக்கும் என்பதற்க்காக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்