பக்தர்களின் தலைமுடியை ரூ.10.48 கோடிக்கு ஏலம் திருப்பதி தேவஸ்தானம்..!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களில் பலர் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்கு கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

அதன்படி நேற்று பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது.

முதல் ரகம் கிலோ ஒன்றுக்கு 22 ஆயிரத்து 495 ரூபாய்க்கும், 2-வது ரக தலைமுடி கிலோ ஒன்றுக்கு 17 ஆயிரத்து 225 ரூபாய்க்கும், 4-வது ரகம் கிலோ ஒன்று 2000 ரூபாய்க்கும், 5-வது ரகம் கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கும் என ஆக மொத்தம் 8 ஆயிரத்து 200 கிலோ தலைமுடி ரூ. 10 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

300 ரூபாய் விரைவு தரிசனம், தர்ம தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றால் 2 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம்.

செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை ரூ.2.80 கோடி உண்டியல் வசூலானது.

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,498 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 41,029 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்