Categories: இந்தியா

இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது : நிதி ஆயோக்..!

Published by
Dinasuvadu desk
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், வியாழக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து  மற்றும் நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்,  உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும், 2030-ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும். ஆனால், தற்போதைய நிலையிலேயே தேசம் இருந்தால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் இழக்க நேரிடும்.
அந்த காலகட்டத்தில் 40 சதவீதம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். 2020-ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர். 60 கோடி பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமானதாக மாறி வருகிறது. தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் உள்ளது. நாட்டில் 52 சதவீத நிலப்பரப்பு வேளாண் பகுதிகளாக இருப்பதால் மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர். நீர்ப்பாசன திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

6 mins ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

11 mins ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

21 mins ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

40 mins ago

ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை…

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

53 mins ago

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…

1 hour ago