நோ பார்கிங் குறித்து புகாரளித்தால் 10% கமிசன் : மத்திய அரசு
மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்தியாவில் பார்கிங் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதனால் இனி விதி மீறி வாகனங்களை பார்கிங் செய்பவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் அதனை ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அவர்கள் செலுத்தும் தொகையிலிருந்து 10% கமிசன் புகார் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகத்திலேயே பார்கிங் வசதி, இடம் குறைவாகத்தான் உள்ளது. அவரது அலுவலகத்தில் வேலைசெய்பவர்கள் கூட சாலைகளில் தான் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.