'நோட்டா'வுக்கு டாட்டா..!! காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி..!!
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி சைலேஷ் பார்மர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த 2014ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மனுவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
DINASUVADU