நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு!உதவி எண்கள் அறிவிப்பு

Default Image

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியானது.

பின்னர் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது .மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளன.

இந்தியர்கள் மீட்பு பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதன் பின்  தூதரக அதிகாரிகள் மூலம் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது  நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்புக்கப்பட்டுள்ளது. 98685 30677, 99682 19303 மற்றும் 011 – 21610285 / 21610286 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்