நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கியது!
தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியானது.
பின்னர் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது .மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளன.
இந்தியர்கள் மீட்பு பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தூதரக அதிகாரிகள் மூலம் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கப்பட்டது.