நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு பெட்ரோல்,டீசல் கடத்தல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை அதிகரிக்கும் நிலையில் நேபாளத்தில் விலை குறைந்துள்ளது.
ஆகவே, அண்டை நாடான நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு பெட்ரோல், டீசல் கடத்தல் அதிகரித்துள்ளது.
இந்தியாவை விட,நேபாளத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 15 முதல் 18 ரூபாய் ஆக குறைவாக உள்ளது. இதனால், இந்திய எல்லைக்கு அருகாமையில் உள்ள நேபாளத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை இந்தியாவிற்கு கடத்தப்படுகிறது. நம்முடைய நாட்டிலுள்ள உத்திரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த பெட்ரோல், டீசல் கடத்தல் விற்பனை பெருவாரியாக நடைபெறுகிறது.