“நேதாஜியை கொன்றது யார் என்று நேருவுக்கு தெரியும்”சுப்ரமணியசுவாமி பரபரப்பு தகவல்…!!!
சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோஸை கொன்றது யார் என்று நேருவுக்கு தெரியும் என்று சுப்ரமணியசுவாமி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மரணத்தில் ஏராளமான குழப்பங்கள் நிலவி விருகின்றன. அவர் இறப்பில் இன்றாளவும் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேதாஜி 1945 ஆண்டு விமான விபத்தில் இறந்ததாக ஜப்பான் அரசு அறிவித்திருந்தது. நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு அந்தநாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார். 1945-ம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரவிய தகவல் நேரு மற்றும் ஜப்பான் நாட்டு கூட்டு சதித்திட்டம் பின்னர் சுபாஸ் சந்திரபோஸ் சிறையிலடைக்கப்பட்டு ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார்.
ஆனால் இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தெரியும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதால் தான் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்க முக்கிய காரணம்.காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் ஆயுதம் ஏந்தினால் அதைப் பிரிட்டன் அரசால் சமாளிக்க முடியாது காரணம் இந்தியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பிரிட்டன் முன்னாள் பிரதமர் க்ளீமண்ட் அட்லீஸ் இதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறினார்.
இன்றாளவும் நேதாஜி என்றாலே கர்ஜிக்கும் சிங்கத்தை போலத்தான் தெரியும் அந்த உருவமும்,ராணுவ சீருடையில் கம்மீரமாகவும் பிரிட்டிஷை நடுங்க வைத்த மாபெரும் தலைவர் ஆனால் இவரின் இறப்பு மர்மமாகவே இருந்துவருவது இந்தியர்களாகிய நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
DINASUVADU