இந்தியாவில் உள்ள முன்னணி கட்சிகளில் ஒன்று பாரதீய ஜனதா கட்சி. நாட்டின் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. தனது 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பல தலைவர்கள் முக்கிய பிரமுகங்களை சந்தித்து பா.ஜ.க.வின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தையும், கதை ஆசிரியருமான சலிம் கான் ஆகியோரை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் தங்கள் நான்கு ஆண்டுகள் சாதனைகள் மற்றும் மோடி அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.
இந்த பிரச்சாரம் ஆனது கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதன் படி கட்சி அமைப்புகள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பேரை சந்தித்து மோடி அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் ஒரு பகுதியாக அமித் ஷா இரண்டு நாள்களுக்கு முன்னர் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து பேசினார்
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…