நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் முடக்கம் !
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ,நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மரணமடைந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள், இணையத்தளத்தை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.