நீதிபதி பி.ஹெச்.லோயா ((B.H. Loya)) மரண வழக்கில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா, நாக்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மரமணடைந்தார்.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த வேறு ஒரு நீதிபதி, வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். இதனிடையே, பி.ஹெச்.லோயா மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து சுயேச்சையான விசாரணை கோரிய மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. லோயா இயற்கையாகவே மரணம் அடைந்ததாகவும், எனவே அதுகுறித்து சிறப்பு விசாரணை தேவை இல்லை எனவும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஏப்ரல் 19ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…