நீட் வினா மொழிபெயர்ப்பு சரியா என்று உறுதி செய்ய வேண்டும்…உச்சநீதிமன்றம்…!!
நீட் தேர்வு வினாக்களில் மொழிபெயர்ப்பு சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், குறிப்பாக மொழிப்பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்கட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் படி, இந்தாண்டு நடைபெறும் நீட் தேர்வில் மொழிபெயர்ப்பு வினாக்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU.COM