நீட் தேர்வுக்கு வயது கட்டாயமில்லை….மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி….உச்சநீதிமன்றம் அதிரடி…!!
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படசூழலில் நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு உள்ள 25 வயது என்ற வரம்பை தளர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீட் தேர்வை பொது பிரிவினர் யாரு வேண்டுமானாலும் எழுதலாம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 25 என்ற வயது வரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினர் 25 வயதுக்குள் இருக்க வேண்டுமென்றும் , இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் மனுதாரர் தரப்பில் நீட் தேர்வுக்கு வயது வரம்பு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.எனவே நீட் தேர்வு எழுத பொதுப்பிரிவினருக்கு 25 வயது என்று நிர்ணயிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டது. இதற்க்கு முறையான விளக்க அளிக்க கோரியும் அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் நீட் தேர்வு எழுத வயது வரம்பு தடை கிடையாது.2019ஆம் ஆண்டு நீட் தேர்வை பொது பிரிவினர் யாரு வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம், வயது வரம்பு கட்டாயமில்லை இல்லை என்று உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு இடைக்கால உத்தரவு என்று அதற்குள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மாறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
DINASUVADU.COM