இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.
இதேபோல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கபட்டது. தற்போது பிற்பகல் 2 மணியளவில் வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் முன் கூட்டியே வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www. cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 76,778 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்னர்.
நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
தெலங்கானாவைச் ரோகன் புரோகித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 1,14,602 மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த ஹிமான்சு ஷர்மா 3வது இடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 1,14,602 மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா அகில இந்திய அளவில் 12வது இடத்தை பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12வது இடம் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…