நீட் தேர்வின்போது என்ன உடை அணியலாம் ?வெளியிட்டது சிபிஎஸ்சி
சிபிஎஸ்இ ,நீட் தேர்வின்போது தேர்வர்கள் வெளிர்நிறமுடைய, வழக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மருத்துவ, பல்மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மேமாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தேர்வுக்கு வந்த மாணவர்களின் முழுக்கைச் சட்டையை வெட்டச் சொன்னது, கம்மலைக் கழற்றச் சொன்னது, சூவைக் கழற்றச் சொன்னது, ஆடையைக் களைந்து சோதனையிட்டது உள்ளிட்ட பல்வேறு செயல்கள் கடும் எதிர்ப்புக்கு உள்ளாயின. இந்நிலையில் எப்படிப்பட்ட உடைகளை அணியலாம், எதையெல்லாம் தேர்வு மையத்துக்குள் கொண்டுவரக் கூடாது என்கிற அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமான ஆடைகளையே அணிய வேண்டும். வெளிர் நிறமுடைய அரைக்கைச் சட்டைகளையே அணிய வேண்டும்.
சட்டைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ், பூக்கள் ஆகியவை இருக்கக் கூடாது. செருப்பு அணியலாம், சூ அணியக் கூடாது. செல்பேசிகளைக் கொண்டுசெல்லக் கூடாது. நகைகள், கைக்கடிகாரம், உலோகத்தாலான எந்தப் பொருளும் அணிந்திருக்கக் கூடாது. பெல்ட், தொப்பி அணியக் கூடாது. ஜியாமெட்ரி பாக்ஸ், கைப்பைகள் ஆகியவற்றைக் கொண்டு செல்லக் கூடாது. தேர்வர்கள் கொண்டுவரும் பொருட்களை வைத்திருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.