நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உட்பட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்க்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சிபிஐ இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதனை விசாரித்து வந்த நிலையில் வழக்கானது நவம்பர் 30 தேதி டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது அதில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, இணைச் செயலர் குரோபா மற்றும் சாம்ரியா, ஆனந்த் மல்லிக்,விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட் நிறுவனத்தின் விகாஸ் பத்னி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.
மேலும் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு என தண்டனை விவரத்தை இன்று நீதிமன்றம் அறிவித்தது. அதில் எச்.சி.குப்தா, குரோபா மற்றும் சாம்ரியா ஆகிய மூன்று பேருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் அபராத தொகையுடன் இதனுடைய மேலாண் இயக்குநர் விகாஸ் பத்னி மற்றும் அதிகாரி ஆனந்த் மல்லிக் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…