நிலக்கரிச் சுரங்க ஓதுக்கீடு..!3 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை..!!

Default Image

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உட்பட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
Image result for நிலக்கரி
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்க்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சிபிஐ இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதனை விசாரித்து வந்த நிலையில் வழக்கானது நவம்பர் 30 தேதி டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது அதில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, இணைச் செயலர் குரோபா மற்றும் சாம்ரியா, ஆனந்த் மல்லிக்,விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட் நிறுவனத்தின் விகாஸ் பத்னி  ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.
Related image
மேலும் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு என தண்டனை விவரத்தை இன்று நீதிமன்றம் அறிவித்தது. அதில் எச்.சி.குப்தா, குரோபா மற்றும் சாம்ரியா ஆகிய மூன்று பேருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் அபராத தொகையுடன் இதனுடைய மேலாண் இயக்குநர் விகாஸ் பத்னி மற்றும் அதிகாரி ஆனந்த் மல்லிக் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்