நிபா வைரஸ்..!கேரளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!
கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியக் சுகாதாரத்துறைக் குழு கேரளா மாநிலத்திற்கு விரைந்து அங்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. கண்ணூரில் உள்ள தலைசேரி அரசு மருத்துவமனையில் நிபா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நிபா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்