கேரளாவில் நிபா வைரசால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசின் உதவியை இந்தியா நாடியுள்ளது.
குயின்ஸ்லேண்ட் அரசுக்கு இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் மனிதர்களுக்கு நிபா வைரஸ் எதிர்ப்புசக்தி கொண்ட மருந்துகள் இருப்பின் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு சிகிச்சை பரிசோதனை கூடத்தில் பலன் அளிப்பதாக தகவல் வெளியான போதும் இதுவரை மனிதர்களுக்கு சோதிக்கப்படவில்லை.
கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்த நிலையில் அக்குடும்பத்தின் நான்காவது நபர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். இதனால் நிபா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3
இந்த நான்கு பேருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் லினியின் மரணமும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 80 பேருக்கு இந்த நோய் பரவியிருக்கலாம் என்ற பீதியால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…