நிதியின்றி மத்திய அரசின் திட்டங்கள் தத்தளிக்கிறதா?
நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசின் பல திட்டங்கள், போதிய நிதியின்றி தத்தளிப்பதாக தெரிவித்து உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு தொடர்பான ஆறு திட்டங்களுக்கு 36 ஆயிரத்து 526 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் 21 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், நகர்ப்புற வளர்ச்சி துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் இதை மறுத்துள்ள அந்த அமைச்சகம், அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, திட்ட மேலாளர்களிடம் இருந்து நிதியை பயன்படுத்தியதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றால் மட்டுமே நிதிக் கணக்கு தெரிய வரும் என்று கூறி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.