நிதிப்பற்றாக்குறையில் 3.3 விழுக்காடு குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : பியூஷ் கோயல்..!
நிதிப்பற்றாக்குறையில் 3.3 விழுக்காடு குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சர் பொறுப்புகளை கவனிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வருவாயை விட செலவீனம் அதிகம் இருந்தால் நிதிப்பற்றாக்குறை ஏற்படும். 2018 – 2019ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறையில் 3.3 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பேசியுள்ள பியூஷ் கோயல், பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை மத்திய அரசு தக்க வைத்து வருவதாகவும், பொருளாதாரம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், நிதிப்பற்றாக்குறை குறைப்பு இலக்கை அடைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.