நிதிஆயோக் கூட்டத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ய சந்திரபாபு முடிவு!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு நிதிஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
டெல்லிக்கு வந்துள்ள பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடந்த 4 நாட்களாக தங்களுக்குள் தீவிரமான ஆலோசனை நடத்தி வருகின்றனர். அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களின் ஆதரவை சந்திரபாபு நாயுடு நாடியுள்ளார்.
ஆந்திர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களுக்கு இணையாக பொருளாதார ரீதியாக வலிமை பெறும் வரை ஆந்திராவுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பும் நிதியுதவியும் அளிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.