நாள் ஒன்றுக்கு 150 முறை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் மாணவர்கள் !அதிர்ச்சி ரிப்போர்ட் ..!

Published by
Dinasuvadu desk

Related image

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் சார்பில்ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களை சார்ந்திருத்தல், இன்ப நாட்டவியல் கோட்பாடு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் புதுமையான முயற்சிகளின் விளைவுகள் என்னும் தலைப்பில் நடந்த ஆய்வில் 20 மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் பயம்கலந்த எதிர்பார்ப்பு, தகவல்கள் காணாமல் போகும் பயம் போன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 150-க்கும் அதிகமான தடவைதனது ஸ்மார்ட் போன்களை சரிபார்த்து கொள்வது தெரியவந்துள்ளது. மேலும் இச்செயல்பாடு மாணவர்களின் உடல்நலத்திற்கு எதிரானது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திட்ட இயக்குநர் முகமது நவீத் கான் கூறுகையில், ‘‘26 சதவீத மாணவர்கள் மட்டுமே தங்களது அழைப்புகளுக்கு பதிலளிக்க ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் சமூக வலைதளத்தை அணுகவும், இணையதளங்கள் மூலம் திரைப்படங்களை காணவும் ஸ்மார்ட் போன்
களை பயன்படுத்துகின்றனர். 14 சதவீத மாணவர்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கின்றனர். 63 சதவீத மாணவர்கள் ஏழு மணி நேரமும், 23 சதவீத மாணவர்கள் எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியிருக்கும் கல்லூரி மாணவர்களின் நிலையைக் குறித்து ஆராயவேஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது” எனக் கூறினார்.

கார்ப்பரேட்டுகளின் குறிஇதனிடையே, ஐபிஎம் மற்றும்கலாரி கேபிடல் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் 90 விழுக்காடாக அதிகரிக்கும். இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 85 கோடியாக உயரும். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும். வளர்ந்து வரும் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு ஏற்ப இணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் முக்கியப் பங்காற்றும். தற்போது இந்தியாவின் மொபைல் ஊடுருவல் 65 விழுக்காடாகவும், இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 45 கோடியாகவும் உள்ளது. அதேபோல, தற்போது40 விழுக்காடு பெண்கள் இணையம்பயன்படுத்துகின்றனர். இவர்களில் 65 விழுக்காடு பெண்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

Recent Posts

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

3 hours ago

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

9 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

9 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

9 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

10 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

10 hours ago