டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன்கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மூன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் விசாரணைக்காக நாளை ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்)) முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் ஐந்தாம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
அதுவரை ப.சிதம்பரத்தைக் கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது. ஜூன் ஐந்தாம் தேதிக்குள் அமலாக்கத்துறையிடம் ஆஜராகுமாறும் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…