முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,தான் பிரதமராக இருந்த போது பிரதமர் மோடி தனக்கு கூறிய அறிவுரைகளை தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்து விட்டதாக கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளை பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் அதிகமான குழப்பங்களே விளையும் எனவும் எச்சரித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரதமராக இருந்த போது, தனக்கு கூறிய அறிவுரைகளை பிரதமர் மோடி தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக மன்மோகன் சிங் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…