பாஜக தலைவர் அமித் ஷா,பிரதமர் மோடி தலைமையிலான அரசு நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ள நிலையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
வருகிற 26ம் தேதியுடன் மோடி அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.அன்றைய தினம் ஒடிசா செல்ல திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்கள் முன்பு கொண்டு செல்ல பிரச்சாரம் மேற்கொள்ளும்படி பா.ஜ.க. மூத்த தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் இலக்கியவாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களை சந்திக்கவும் அவர்களின் ஆதரவைக் கோரவும் பணிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, பாஜகவின் திட்டங்களை விளக்க, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…