நாட்டுக்காக கேப்டன் பொறுப்பையே விட்டுக்கொடுத்த தோனி ..!!
இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வந்த மஹேந்திரசிங் தோனி, 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். பின்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் தலைமையிலிருந்தும் 2017ம் ஆண்டு தொடக்கத்தில் விலகினார்.
இதன்பின்னர் விராட் கோலி மூன்று வித ஃபார்மேட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். பல்வேறு விமர்சனங்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தோனியும் இருப்பதால் அவரது ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டும் வருவார்.பீல்டிங் செட் செய்வது, பவுலர்களின் உத்தி என பதவியில் இல்லாத கேப்டனாகவே இருந்து வந்தார் தோனி.
ஆனால் தோனி இல்லாத பல சமயங்களில் கோலி தடுமாறியே வருவதைப் பார்க்க முடிகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, சொந்த ஊரான ராஞ்சியில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்தும், தான் பதவி விலகிய காரணம் குறித்தும் தோனி மனம் திறந்துள்ளார். வரவிருக்கும் புதிய கேப்டனுக்கு (விராட் கோலி), 2019 உலகக்கோப்பையை எதிர்கொள்ள தேவைப்படும் கால அவகாசத்தை அளிக்கவே ஓய்வு பெற்றதாகவும், சரியன கால இடைவெளி இல்லாமல் வலிமையான அணியை வகுப்பது ஒரு கேப்டனால் முடியாத காரியும் எனவும் கூறினார். தான் சரியான நேரத்தில் கேப்டன் பொறுப்பை கோலியிடம் ஓப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய அணியின் தோல்விக்கு போட்டித்தொடர் தொடங்கும் முன்னர் போதிய பயிற்சி இல்லாததே காரணம் எனவும் கருத்து தெரிவித்தார். உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி… வீரர்களின் வரிசையை நிலையாக உருவாக்கி, சரியான இடைவெளியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பளித்து வந்தார் தோனி.தோனியின் இந்த முடிவு இந்திய நாட்டுக்காக என்று ரசிகர்கள் இந்த செய்தியை வைரல் ஆக்கி வருகின்றனர்.
DINASUVADU