நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம்…!சென்னை ஐ.ஐ.டி.க்கு எத்தனையாவது இடம் ?

Default Image

தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில்  இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், National Institutional Ranking Framework (NIRF) India Rankings 2018 என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ரேங்கிங் பட்டியலை வெளியிட்டார். 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.முதல் 10 இடங்களின் மூன்றாம் இடத்தில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி, ஐந்தாம் இடத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரி, ஆறாம் இடத்தில் லயோலா கல்லூரி, சென்னை மற்றும் பத்தாவது இடத்தில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன.சிறந்த பல்கலைகழகங்கள் தரவரிசையில், 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகம், 13வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைகழகம், 16வது இடத்தில் வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, 18 வது இடத்தில் மெட்ராஸ் பல்கலைகழகம் உள்ளன. ஓவர் ஆல் ரேங்கிங்கில், ஐ.ஐ.டி. பெங்களூரு முதலிடத்திலும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் இரண்டாவது இடத்திலும், அண்ணா பல்கலைகழகம் 10வது இடத்திலும் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital