நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு!
மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு, நாட்டின் குடியரசுத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரியில் இருந்து ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.