நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு.
டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப். 11-இல் நிறைவடைந்தது. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாா்ச் 14-ல் தொடங்கியது. ஏப்ரல் 8-ஆம் தேதி வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கிய மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.