நாடாளுமன்ற தேர்தலில் மோடியும் வெல்ல மாட்டார், பாஜகவும் வெல்லாது….ராகுல்காந்தி கருத்து….!!
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியும் வெல்ல மாட்டார், பாஜகவும் வெல்லாது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி மீது, இளைஞர்களும், விவசாயிகளும் அதிருப்தியடைந்துள்ளதாகவும், வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி தோல்வியடைந்து விட்டார் எனவும் கூறினார்.