’வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ – சித்தராமையா அதிரடி!
இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கருநாடக மாநிலமுன்னாள் முதலமைச்சரும் ஆவார். 2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக என்னை நியமித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளேன். இதற்காக மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட போவதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல.மாநில அரசியலை விட்டு நான் செல்ல மாட்டேன் அதுவே எனக்கு அஸ்திவாரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதாக வந்த தகவல்களும் தவறானது. அதுபற்றி நான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆசையும் எனக்கு இல்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன்சிங், விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருந்தார்
ஆனால் பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணமதிப்பீட்டு இழப்பால் விவசாயிகள், பொருளாதார பிரச்சனை என பல சாதாரண மக்கள் மிகுந்த தொல்லையை அனுபவித்து வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர தயாராகி வருகின்றன என்று கூறினார்.
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…