நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சித்தராமையா

Default Image

’வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ – சித்தராமையா அதிரடி!

 

இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கருநாடக மாநிலமுன்னாள் முதலமைச்சரும் ஆவார். 2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக என்னை நியமித்துள்ளார். டெல்லியில்  இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளேன். இதற்காக மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் ஈடுபட போவதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல.மாநில அரசியலை விட்டு நான் செல்ல மாட்டேன் அதுவே எனக்கு அஸ்திவாரம்  நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதாக வந்த தகவல்களும் தவறானது. அதுபற்றி நான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆசையும் எனக்கு இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன்சிங், விவசாயிகள் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருந்தார்

ஆனால் பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணமதிப்பீட்டு இழப்பால் விவசாயிகள், பொருளாதார பிரச்சனை என பல சாதாரண மக்கள் மிகுந்த தொல்லையை அனுபவித்து வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர தயாராகி வருகின்றன என்று கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்