நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க 40தொகுதிகளை ஒதுக்க வேண்டும்..!
உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டணி அமைக்க சுமார் 40தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதிக் கட்சி இணைந்து பா.ஜ.க வேட்பாளர்களை தோற்றகடித்தன. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.
2014நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த தொகுதிகளை அந்தந்தக் கட்சிக்குப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2014நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் 34தொகுதிகளிலும் சமாஜ்வாதிக் கட்சி 31தொகுதிகளிலும் இரண்டாமிடம் பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு 10தொகுதிகளைக் கூடுதலாக எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம் என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது