கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக காங்கிரஸ், பாஜக தேசியத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக காங்கிரஸ், பாஜக தேசியத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா பேசும்போது, “கர்நாடக மாநிலத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.88,583 கோடியிலிருந்து தற்போது ரூ., 2,19,506 கோடியாக பாஜக அரசு உயர்த்தியுள்ளது. இந்த நிதியைச் செலவழித்ததற்கு கணக்குகளை கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தருமா” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் சித்தராமையா ட்விட்டரில் கூறியதாவது: மத்திய அரசு அளித்த நிதி எங்கேயும் போகவில்லை. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலைத் தயாராக வைத்துள்ளோம்.
மத்திய அரசு அளித்த நிதியானது நீர்ப்பாசனம், கல்வித்துறை, மருத்துவமனை, சாலை மேம்பாடு, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே பாதை அமைத்தல், பயிர்க் காப்பீடு, விவசாயக் கடன் தள்ளுபடி என பல வழிகளில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இன்னும் நீள்கிறது. மத்திய அரசு நிதியில் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துள்ளோம்.
சட்டப் பேரவையிலேயே இந்த கணக்குகளை நாங்கள் ஒப்படைத்து விட்டோம். இது கர்நாடக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கும் தெரியும்.
மத்திய அரசு கர்நாடகாவுக்காக சிறப்பு நிதி ஒன்றும் தரவில்லை. வழக்கமாக மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியைத்தான் மத்திய அரசு தந்தது. மக்களிடம் பொய் கூறி அவர்களை முட்டாளாக்கும் வேலையை பாஜக முதலில் நிறுத்திக் கொள்ளவேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தூங்கிக் கொண்டிருந்ததா? மத்திய அரசு அளித்த நிதி விவரத்தை பேரவையில் தெரிவித்து பலமுறை விவாதம் நடத்தியிருக்கிறோம். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மையாகிவிடாது” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…