நாங்கள் இனிதான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் …!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Default Image

நாங்கள் இனிதான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், கொள்கை ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நன்றி 3 மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடித்திருக்கிறோம். இந்த தேர்தலின் வெற்றி தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. நாங்கள் இனிதான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்