காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு இதே நாள் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு (Mandsaur) மன்ட்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ராகுல், பெரும் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கும் மோடி அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மட்டும் தயங்குவதாக விமர்சித்தார். முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.