நவீனமயம் படுத்தப்படும் கேரள அரசுப் பள்ளிகள்!

Default Image

 

கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசு நிதியில் செயல்படக்கூடிய அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் இடது முன்னணியின் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும்.

மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், “இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்