ராணுவ வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவனும் ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நிலையில், மற்றொரு இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
புல்வாமாவில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ஷோபியான் மாவட்டத்தின் சில்லிபோரா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இதில் ரோந்து சென்ற 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…