' நதிகளில் வெள்ளப்பெருக்கு ' – இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா..!!!
பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.
அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலபி பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோல, அருணாச்சலப்பிரதேசத்திலும் ஓடும் சாங் போ என்று அழைக்கப்படும் சியாங் நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாங் போ நதியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக சீனா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக சீன அரசு இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையில், அஸ்ஸாமில் கொட்டித் தீர்க்கும் மழையின் காரணமாக தேசுய நெடுசாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சில பகுதிகளில் சாலை போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.