நடிகர் திலீப், கேரள ஐகோர்ட்டில் திடீர் மனு..!
நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் சென்ற அக்டோபர் மாதம் 3–ந் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார்.
அவர், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு, கேரள ஐகோர்ட்டில் திடீரென ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் அவர், ‘‘இந்த வழக்கில் கேரள போலீசின் சிறப்பு புலனாய்வு குழு பாரபட்சமாக விசாரணை நடத்தி உள்ளது. எனவே இந்த வழக்கில் மாநில போலீசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திரமான அமைப்பு (சி.பி.ஐ.) விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியே வரும்’’ என கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.