நடப்பாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிப்பு…!!
இலக்கிய ஆளுமைகளுக்காக சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும் நடப்பாண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
இலக்கியப் படைப்புகளுக்கான உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் பாராட்டுப் பட்டயமும் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள சாகித்ய அகாடமி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், விருது பெற்ற நூல்களின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ் பிரிவுக்கான சாகித்ய அகாடமி விருது, மறைந்த கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் படைப்புக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்த கசாக்கின் இதிகாசம் என்ற நாவலுக்கு, சிறந்த மொழியாக்கத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.
dinasuvadu.com