நக்சல் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது – பூகேஷ் பாகெல்..!!
நக்சல் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என சத்தீஸ்கரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பூகேஷ் பாகெல் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் நாளை பதவியேற்கவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ் பாகெல், தான் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை நியமனம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நக்சல் விவகாரம் முக்கிய பிரச்சினை என்றும், ஒரே நாளில் அதை தீர்க்க முடியாது என்றும் கூறிய அவர், மக்களின் துணையோடு நக்சல்களை அப்புறப்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.