கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த சூழலில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமாக 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது
இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.மொத்தமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு வாரியாக 29 சிட்டி கவுன்சிலில் பாஜக 10லும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மஜத 3 இடத்திலும் வென்றுள்ளது.
மொத்தமுள்ள 53 முனிசிபாலிட்டியில் பாஜக 12லும், காங்கிரஸ் 19 இடங்களிலும், மஜத 8 இடத்திலும் வென்றுள்ளது. 20 டவுன் பஞ்சாயத்தில் பாஜக 7லும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மஜத 2 இடத்திலும் வென்றுள்ளது.வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியே காலையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும் இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் இதிலும் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாலைக்குள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…