” தோற்கிறது பாஜக ” வெற்றியை நோக்கி காங்கிரஸ் கட்சி…!!

Default Image

பெங்களூர்: கர்நாடகாவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த சூழலில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநிலத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 67.51 சதவீத வாக்குகள் பதிவாகியது.தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல்  நடந்து வருகிறது.105 நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 2474 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமாக 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 2709 வார்டுகளுக்கு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது

இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில்  காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.மொத்தமுள்ள  105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு வாரியாக 29 சிட்டி கவுன்சிலில் பாஜக 10லும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மஜத 3 இடத்திலும் வென்றுள்ளது.

மொத்தமுள்ள 53 முனிசிபாலிட்டியில் பாஜக 12லும், காங்கிரஸ் 19 இடங்களிலும், மஜத 8 இடத்திலும் வென்றுள்ளது. 20 டவுன் பஞ்சாயத்தில் பாஜக 7லும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மஜத 2 இடத்திலும் வென்றுள்ளது.வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 925 இடங்களிலும், பாஜக 861 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 337 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியே காலையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும் இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் இதிலும் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாலைக்குள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்