தொழில் முனைவோருக்காக 1 லட்சம் கோடி ரூபாய் நிதியம் – பிரதமர் மோடி அறிவிப்பு..!
நீண்டகால அடிப்படையில் தொழில்முனைவோருக்காக 1 லட்சம் கோடி ரூபாய் நிதியத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடிய பிரதமர் தொழில்முனைவோருக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாயில், 7 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நடைமுறைச் சிக்கல்களை களையும் விதத்தில் வரிச்சலுகைகள், சட்ட ரீதியான உதவிகளையும் வழங்க அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
டிஜிட்டல், தொழில் நுட்பங்கள் மட்டுமின்றி வேளாண்மை உள்ளிட்ட ஊரகப்பகுதி சார்ந்த தொழில்களிலும் தொழில் முனைவோர் உருவாக வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.