தொடங்கும் முன்பே முடிந்த மேட்ச் 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப்பிடிக்கல ! பிரகாஷ் ராஜ் கிண்டல்..!

Published by
Dinasuvadu desk

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாமல் 104 எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா அரசை 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

”கர்நாடக மாநிலம் இனி காவிமயமாகாது. ஆனால், வண்ணமயமாக இருக்கும். மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டதே. 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை பாஜக அரசு. நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும், கர்நாடக மக்களே இனிமேல் சேற்றை வாரி இறைக்கும் அரசியலைப் பார்க்கத் தயாராக இருங்கள். நான் தொடர்ந்து மக்களின் பக்கமே இருப்பேன், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

14 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

14 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

14 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

14 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

15 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

15 hours ago